நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உம்ரா யாத்திரைக்காக டத்தின் விவியும் அவரது கணவரும் கடப்பிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதித்தது 

கோலாலம்பூர்:

உம்ரா யாத்திரைக்காக டத்தின் விவியும் அவரது கணவரும் கடப்பிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதித்தது.

இ-காமர்ஸ் தளமான ஃபேஷன் வாலெட்டின் நிறுவனர் டத்தின் விவி யூசோப், அவரது கணவர் டத்தோ ஃபட்சாருதீன் ஷா அனுவார் ஆகியோர் உம்ரா யாத்திரைக்கு செல்ல கடப்பிதழ் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பத்திற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை ஏதும் இல்லை.

இதனைத் தொடர்ந்து கடப்பிதழை   டத்தின் விவி, ஃபட்ஸாருதீன் ஆகியோருக்கு அவர்களது வழக்கறிஞர் மூலம் வழங்க நீதிபதி ரோஸ்லி அகமது அனுமதித்தார்.

கடப்பிதழ் விண்ணப்பம் இன்று டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி  ஜனவரி 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

அதன் பின் கடப்பிதழ் மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset