நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பி40, எம்40, டி20 என்ற வகைப்பாடு மக்களின் உண்மையான பொருளாதார நிலையை பிரதிபலிக்கவில்லை: கசானா

கோலாலம்பூர்:

பி40, எம்40, டி20 என்ற வகைப்பாடு மக்களின் உண்மையான பொருளாதார நிலையை பிரதிபலிக்கவில்லை.

கசானா ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

வருமானக் குழுக்களின் கீழ் 20% (பி20), நடுத்தர 50% (எம்50), அதற்கு மேல் 30% (டி30) என்ற வகைகளின் அடிப்படையில் பிரிப்பது பொருளாதாரத்தின் சிறந்த பிரதிபலிப்பாகும்.

மலேசியாவில் ஏழைகள், நடுத்தர பிரிவினரை தேடுதல்  என்ற தலைப்பில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,

பி40, எம்40, டி20 ஆகியவற்றின் நீண்ட கால வகைப்பாடு இனி மக்களின் உண்மையான பொருளாதார நிலையை பிரதிபலிக்கவில்லை.

எம்40 குழுவில் உள்ள பல குடும்பங்கள், பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படுகின்றன.

நடுத்தர வர்க்கத்தின் குணாதிசயமான செலவு செய்யும் முறைகள் இல்லை.

ஆகையால் புதுப்பிக்கப்பட்ட செலவின, ஒருங்கிணைந்த வருமானம் அடிப்படையில் பி20-எம்50-டி30 பிரிவை கசானா முன்மொழிகிறது.

உணவு, வீடு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தும் குடும்பங்களை பி20 குறிப்பிடுகிறது.

எம்50 என்பது பொருளாதார ரீதியாக நிலையற்ற குடும்பங்கள் அத்தியாவசிய, ஆர்வமுள்ள பொருட்களுக்கு இடையேயான வர்த்தக பரிமாற்றங்களைக் குறிக்கிறது.

டி30 நடுத்தர வர்க்கத்தைக் குறிக்கும்   செலவு முறைகளைக் காட்டும் குடும்பங்களைக் கொண்டுள்ளது.

ஆனால் அவை உலகளாவிய தரத்தின்படி செல்வந்தர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அது கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset