செய்திகள் மலேசியா
சாலை போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படாது : அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
ஓட்டுநர்கள் தங்களின் நிலுவையில் உள்ள சாலை போக்குவரத்து அபராதங்களைச் குறைந்த சலுகை விகிதத்தில் செலுத்த 6 மாதங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
நாளை ஜனவரி 3-ஆம் நாள் முதல் ஜூன் 30ஆம் நாள் வரை சிறப்பு ஆறுமாத கால அவகாசம் வழங்கப்படும்.
சிறப்பு சலுகையின் முழு விவரம்
1. சலுகை விகிதம்:
RM300 என்ற முந்தைய தொகைக்குப் பதிலாக RM150 என்ற ஒரே நிலையான தொகையில் சமன்களைச் செலுத்தலாம்.
2. தண்டனை புள்ளிகள் இல்லை:
இந்த அவகாசக் காலத்தில், சமன்களைச் செலுத்துவோர் மீதான தண்டனை புள்ளிகள் (demerit points) சேர்க்கப்படமாட்டாது.
3. கடைசி தேதி:
ஜூன் 30க்குப் பின்னர் சமன்களைச் செலுத்தாதவர்கள் தங்களின் சாலைவரி (Road Tax) மற்றும் வாகன ஓட்டுநர் உரிமத்தை (Driving License) புதுப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தகவல்கள்:
• தற்போது 20 லட்சம் சம்மன்கள் நிலுவையில் உள்ளன.
• இந்தச் சலுகை அவகாசம் குற்றவாளிகளுக்கு தங்கள் பதிவுகளைச் சரிசெய்து மறு வாய்ப்பு அளிக்கின்றது.
சலுகை பொருந்தும் சம்மன்கள்:
1. வேக வரம்பு மீறல் (Speed Limit Exceeding).
2. சிவப்பு விளக்கு மீறல் (Running Red Lights).
3. வாகனத்தில் வைக்கப்பட்ட சம்மன்கள் (Saman Tampal).
பணம் செலுத்தும் வசதிகள்:
• புதிய MyJPJ செயலி மூலம் இன்று முதல் பணம் செலுத்தலாம்.
• JPJ அலுவலகங்கள், கியாஸ்க்கள், மற்றும் மொபைல் கவுன்டர்கள் வழியாகவும் செலுத்த முடியும்.
• MyEG தளத்தில் இந்தச் சலுகை வழங்கப்படமாட்டாது.
இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள அபராதத் தொகைகளைச் செலுத்தி விடுங்கள் என அந்தோனி லோக் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
January 4, 2025, 7:16 pm
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பேரணியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: எம்.குலசேகரன்
January 4, 2025, 4:35 pm
BREAKING NEWS: நஜிப்பிற்கு ஆதரவான ஒற்றுமை கூட்டத்தை மஇகா தொடரும்: டத்தோஶ்ரீ சரவணன்
January 4, 2025, 4:09 pm
பொறாமையால் பெண் கொலை : சந்தேக நபர் கைது
January 4, 2025, 4:02 pm
இந்து சமயத்திற்கு என புளூபிரிண்டை தயார் செய்வதே மஹிமாவின் முதன்மை இலக்கு: டத்தோ சிவக்குமார்
January 4, 2025, 3:47 pm
12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் எச்எம்பிவி தொற்று நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்: மருத்துவர்
January 4, 2025, 3:45 pm
நஜிப்பிற்காக ஆதரவாக 5,000 பேர் புத்ராஜெயாவில் கூடுவார்கள்: பெர்காசா அறிவிப்பு
January 4, 2025, 3:39 pm
2024-ஆம் ஆண்டில் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் அடைவு நிலைகள்
January 4, 2025, 3:04 pm
புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்புகள்: இசை விழா வழிகாட்டலில் மறு ஆய்வு செய்யப்படவுள்ளது
January 4, 2025, 2:50 pm