நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புஸ்பாக்கோம் (Puspakom) ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் புதிய வாகனப் பரிசோதனை மையங்கள் விண்ணப்பம்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

புஸ்பாக்கோம் (Puspakom) நிறுவனத்தின் 30 ஆண்டுகால தனியுரிமை சேவை முடிவடைய உள்ள நிலையில், மலேசியாவில் வாகனப் பரிசோதனை சேவைகளை நடத்த புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்

இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகன பரிசோதனை சேவைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய நிறுவனங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அந்தோனி லோக் தெரிவித்தார். 

எத்தனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். புதிய நிறுவனங்கள் தங்கள் வசதிகளை அமைக்க சிறிது காலம் தேவைப்படும். இருந்தாலும் இந்த நடவடிக்கையானது ஓட்டுநர்களின் பரிசாதனை நடவடிக்கைக்கு தேர்வுகளை வழங்கும்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) புஸ்பாக்கோம் நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளை விசாரணை செய்து வருகிறது. அவர்கள் பாதுகாப்பற்ற வாகனங்களை பரிசோதனையில் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்றவர்களையும் விசாரணைக்கு அழைப்போம்,” என்று அமைச்சர் கூறினார்.

1994 முதல் புஸ்பாக்கோம் வாகன பரிசோதனை சேவைகளில் தனியுரிமை பெற்ற ஒரே நிறுவனமாக செயல்பட்டு வந்தது. 2024 ஆகஸ்ட் 31-இல் அந்த அனுமதி முடிவடையும். புதிய நிறுவனங்களின் வருகை வாகன பரிசோதனையில் தரம் மற்றும் சேவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset