நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையின் நடுவில் கிடந்த பேட்டரியை மோதிய சொகுசு கார் எரிந்து நாசமானது

ஜார்ஜ்டவுன்:

சாலையின் நடுவில் கிடந்த பேட்டரியை மோதிய சொகுசு கார் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் நேற்று மாலை 3.18 மணியளவில் பினாங்கு சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஷாம் ஷா பாலத்தில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் மெர்சடிஸ் சி 200 காரின் ஓட்டுநர் சாலையின் நடுவில் கிடந்த பேட்டரியை மோதியது.

இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாக பினாங்கு தென் மேற்கு போலிஸ்  தலைவர் சசாலி அடாம் கூறினார்.

பேட்டரியை மோதிய அக்கார் முழுமையாக எரிந்து சாம்பலானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset