நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் புத்தாண்டு பிறப்பு: நாளை மலேசியாவில் நடைபெறவிருக்கும் புதுமைகள்

கோலாலம்பூர்: 

2025ஆம் ஆண்டு புத்தாண்டு நாளை ஜனவரி 1ஆம் தேதி வரவேற்க உலக மக்கள் அனைவரும் தயாராகி கொண்டிருகின்றனர். 

அவ்வகையில் 2025ஆம் ஆண்டை முன்னிட்டு நாளை மலேசியாவில் நிகழவிருக்கும் மாற்றங்களையும் புதுமைகளையும் பார்க்கலாம். 

மலேசியா அடுத்தாண்டு முதல் ஆசியான் உச்சநிலை மாநாட்டினை ஏற்று நடத்துகிறது. 1977,1997, 2015ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா நான்காவது முறையாக 2025ஆம் ஆண்டு ஆசியான் கூட்டத்தை ஏற்று நடத்துகிறது 

அடுத்ததாக, சமூக ஊடகங்கள் நடத்துனர்கள் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் உரிமம் பெற வேண்டும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

சமூக ஊடக பயனர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது 

நாளை முதல் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை ரொக்கமில்லா நடைமுறையில் வாங்கி கொள்ளலாம். நாளை முதல் KTM BERHAD இந்த வசதியை அறிமுகப்படுத்துகிறது 

மேலும், நாளை முதல் ஜொகூர் மாநிலத்தில் சனி, ஞாயிறுக்கிழமை விடுமுறை கொண்டு வரப்படுகிறது.  இதற்கு முன் ஜொகூர் மாநிலத்தில் வார இறுதி விடுமுறை வெள்ளி, சனிக்கிழமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset