நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெங்கலான் சேப்பா போலிஸ் நிலைய தடுப்பு காவலில் கைதி உயிரிழந்தார்: போலிஸ்

கோத்தாபாரு:

பெங்கலான் சேப்பா போலிஸ் நிலைய தடுப்பு காவலில் இருந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளந்தான் போலிஸ் தலைவர் முகமத் யூசோப் மாமாட் இதனை உறுதிப்படுத்தினார்.

அந்த நபர் கடந்த டிசம்பர் 26 அன்று மதியம் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39ஏ (1)இன் கீழ்  அவர் விசாரிக்கப்பட்டு வந்தார்.

தடுப்பு காவல் கோரி அந்நபர் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி காலை 9.14 மணிக்கு கோத்தாபாரு நீதிமன்றத்திற்கு  கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில், பெங்கலான் சேப்பா காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் அந்த நபரை மயங்கிய நிலையில் கண்டனர்.

பின்னர் 7.40 மணியளவில் பெங்கலான் சேப்பா சுகாதார கிளினிக்கின் உதவி அதிகாரி ஒருவரால் அவர் இறந்து விட்டதை  உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset