நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜனவரி 6ஆம் தேதி நஜிப் ரசாக்கின் ஆதரவு பேரணி: நடப்பு மடானி அரசாங்கத்தைப் பாதிக்க செய்யாது

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவருடன் ஆதரவாக இருப்பதைப் பறைசாற்றும் விதமாக ஜனவரி 6ஆம் தேதி நஜிப் பேரணி நடைபெறவுள்ளது 

நஜிப் பேரணியால் நடப்பு மடானி அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் கூறினார் 

இந்த ஒரு பேரணியானது நடப்பு அரசாங்கத்தை ஆட்டம் காண செய்யும் கருவியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று வட மலேசியா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் அஹ்மத் மர்தஹ்டா கூறினார் 

அரசாங்கத்தைக் கவிழ்க்க முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் வாயிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

அதை விடுத்து பேரணி மூலம் அரசாங்கத்தை மிரட்டல்கள் விடுக்க முடியாது என்று அவர் சொன்னார் 

நஜிப் ரசாக்கின் பேரணியில் பாஸ் கட்சி கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் ம.இ.காவும் பேரணியில் கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset