நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா ஒரு பெரிய உலக சக்தியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியா தற்போது ஒரு மிகப் பெரிய உலக சக்தியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

மலேசியா இப்போது ஒரு மரியாதைக்குரிய மூலோபாய பங்காளியாக பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் உலகளாவிய பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் பங்கிற்காக பெரும் சக்திகளின் தலைவர்களிடமிருந்து அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இது முக்கியமாக பாலஸ்தீன மக்களுக்கான நீதியை ஆதரிப்பதிலும், நியாயமான, சமநிலையான உலக ஒழுங்கிற்காக போராடுவதிலும் உள்ளடக்கியதாகும்.

இந்த ஆண்டு முழுவதும் நான் மேற்கொண்ட வெளிநாட்டு அதிகார பயணங்களின் போது உலகப் பிரமுகர்களை சந்தித்ததுடன் நட்பு நாடுகளுடனான உறவுகளை மேலும்  வலுப்படுத்திக் கொள்ளப்பட்டது.

குறிப்பாக முதலீடு மற்றும் தேசிய ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டை உலக அரங்கில் உயர்த்தியது  என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார். 

2025 ஆம் ஆண்டளவில் ஆசியானின் எழுச்சிக்கு முன்னோடியாக இருக்கும் பொறுப்பை ஏற்க மலேசியா தயாராக உள்ளது.

இதனால் பிராந்தியத்தை மேலும் உள்ளடக்கிய மற்றும் நிலையான ஒரு புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும்  என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset