நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் பத்திரிக்கை துணை ஆசிரியர்  வெங்கடேஷை டத்தோஸ்ரீ சரவணன்  சந்தித்தார்

கோலாலம்பூர்:

தமிழ் பத்திரிக்கை துணையாசிரியர் வெங்கடேஷ் மூலையில் ஏற்பட்ட ரத்த கசிவு  காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

37 வயதுடைய அவர், கடந்த  ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்த தகவல் அறிந்த மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று  சுங்கை பூலோ மருத்துவமனைக்கு சென்று வேங்கடேசை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதோடு  அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய டத்தோஸ்ரீ சரவணன், உதவி நிதியையும் வழங்கினார்.  

மேல் சிகிச்சைக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset