நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் தேசிய பொங்கல் விழாவுடன்  இந்தியர் பாரம்பரிய கலாச்சார மையம் திறக்கப்படும்: டான்ஶ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில் தேசிய பொங்கல் விழாவுடன் இந்தியர் பாரம்பரிய கலாச்சார மைய திறப்பு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கலை முன்னிட்டு ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயம், கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பத்துமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் ஆகியவற்றில் பொங்கல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு பொங்கல் வைப்பதுடன் சிறப்பு அபிஷேக, சிறப்பு பூஜைகளுக்கு பின் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

அதே வேளையில் சூரிய பொங்கல் அதாவது வீட்டில் பொங்கல் வைக்க உகுந்த நேரம் காலை 7.30 மணி முதல் காலை 10 மணியாகும்.

மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணிக்கும் பொங்கல் வைக்கலாம்.

ஆகவே மலேசிய மக்கள் இந்நேரங்களை கருத்தில் கொண்டு பொங்கலை வைக்க வேண்டும் என டான்ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

இதை தவிர்த்து பத்துமலையில் தேசிய பொங்கல் விழா வரும் ஜனவரி 19ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பத்துமலை இந்தியர் கலாச்சார மையமும் திறக்கப்படவுள்ளது.

என் தலைமையில் நடைபெறும் இவ்விரு விழாவிற்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் திரளாக வந்து இவ்விழாக்களில் கலந்து கொள்ளுமாறு டான்ஶ்ரீ கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset