நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 மில்லியன் ரிங்கிட் காப்புறுதி இழப்பீட்டை பெறுவதற்காக சொந்தமாக கண்களை குருடாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த்:

1 மில்லியன் ரிங்கிட் காப்புறுதி இழப்பீட்டை பெறுவதற்காக சொந்தமாக கண்களை குருடாக்கியதாக ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக தனது இடது கண்ணை வேண்டுமென்றே காயப்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

டான் கோக் குவான் (வயது 52)தவறான காப்பீட்டுக் கோரிக்கைகளைச் செய்து காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், இடது பார்வை குறைபாடுள்ள அந்நபர்  குற்றத்தை மறுத்தார்.

மேலும் மாண்டரின் மொழியில் இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டவுடன் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும் என 
நீதிபதி சித்தி ஜுலைகா நோர்டின் கோரினார்.

இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரை ஒருவர் உத்தரவாதத்துடன் 10,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்க அனுமதித்தார்.

மேலும் வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் பிப்ரவரி 20ஆம் தேதியை நிர்ணயித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset