நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்கேசோவின் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 512,518 பெண்கள் பங்களித்துள்ளனர்

கோலாலம்பூர்:

பெர்கேசோவின் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 512,518 பெண்கள் பங்களித்துள்ளனர்.

அத்திட்டத்திற்கான சிறப்புக் குழுவின் தலைவர் கஸ்தூரி பட்டு இதனை கூறினார்.

இல்லத்தரசிகளை பாதுகாக்கும் நோக்கில் பெர்கேசோ இந்த பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தில் இதுவரை 512,518 பெண்கள் பங்களித்துள்ளனர்.

இது மொத்தம் 61.5 மில்லியன் ரிங்கிட் மொத்த பங்களிப்பு மதிப்பை உள்ளடக்கியதாகும்.

இதன் மூலம் மனிதவள அமைச்சு இத்திட்டத்தின் 100 சதவீத இலக்கை அடைந்துள்ளது.

மேலும் 2019ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை 3.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இல்லத்தரசிகளின் நலனைக் கவனித்து அவர்களின் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதில் இந்த திட்டத்தின் செயல்திறனை இது நிரூபிக்கிறது.

கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்வில் இச்சாதனைகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset