செய்திகள் மலேசியா
நஜிப் ஆதரவு பேரணியில் கெஅடிலான் உறுப்பினர்கள் இணைய வேண்டிய அவசியம் இல்லை: ஹசான்
கோலாலம்பூர்:
டத்தோஶ்ரீ நஜிப் ஆதரவு பேரணியில் கெஅடிலான் உறுப்பினர்கள் இணைய வேண்டிய அவசியம் இல்லை.
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் இதனை கூறினார்.
ஜனவரி 6ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக பேரணி நடைபெறவுள்ளது.
அம்னோ, பாஸ் உட்பட பல கட்சிகள் இப்பேரணியில் கலந்து கொள்ளவுள்ளன.
ஆனால் இப்பேரணியில் கெஅடிலான் உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்.
யாராக இருந்தாலும் ஊழல், நம்பிக்கை துஷ்பிரயோகம், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக கெஅடிலான் எப்போதும் உறுதியாக உள்ளது.
ஆகையால் அப்பேரணி நடத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 6:07 pm
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
January 2, 2025, 5:23 pm
97 சதவீதம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர்: ஃபட்லினா
January 2, 2025, 4:21 pm