செய்திகள் மலேசியா
பகமையை மறந்து நஜிப்பிற்காக ஒன்றிணையும் அம்னோ, தேசிய கூட்டணி: பேரணிக்கு அழைப்பு
கோலாலம்பூர்:
பகமையை மறந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்காக அம்னோவும் தேசியக் கூட்டணியும் ஒன்றிணைய உள்ளன.
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக வரும் ஜனவரி 6ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் அரச உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணைக்காக இப் பேரணி நடத்தப்படுகிறது.
இந்த பேரணியில் அம்னோவும் தேசிய கூட்டணியும் ஒன்றிணைய உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்ராஜெயாவில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே காலை 9 மணிக்கு திட்டமிடப்பட்ட பேரணியில் உறுப்பினர்களை அணி திரட்டு வருமாறு பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசன் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்பின் மகத்துவம், சட்டத்தின் ஆட்சியைப் பற்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்ப, உறுப்பினர்கள் உடனிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
இதே போன்று அம்னோ, தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் நீதிமன்றத்தின் முன் அணி திரளவுள்ளன.
ஆக மொத்தத்தில் நஜிப்பிற்கான பகையை மறந்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 6:07 pm
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
January 2, 2025, 5:23 pm
97 சதவீதம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர்: ஃபட்லினா
January 2, 2025, 4:21 pm