நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீர்த்தேக்க அணை உடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

நீர்த்தேக்க அணை உடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டது.

சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

நேற்று மாலை நீர்த்தேக்க அணை உடைந்ததை தொடர்ந்து, திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் சௌஜானா உத்தாமா தாமான் ஶ்ரீ ஆலம் குடியிருப்பாளர் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுங்கைபூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் தன்னார்வக் குழுவை களத்திற்குச் சென்று சமீபத்திய நிலைமையை ஆய்வு செய்து உடனடி உதவி தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவ உத்தரவிடப்பட்டது.

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையக் குழு, குடியிருப்பாளர்களின் நலன் பேணப்படுவதை உறுதிசெய்ய எப்போதும் பாடுபடும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset