நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெக்ஸ் நெடுஞ்சாலையில் மின்னணு கட்டண முறையில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் மோசமான போக்குவரத்து நெரிசல்

புத்ராஜெயா:

மெக்ஸ் நெடுஞ்சாலையில் மின்னணு கட்டண முறையில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாஜு எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையின் புத்ராஜெயா டோல்  சாவடியில் இன்று காலை மின்னணு கட்டண முறை செயல்படவில்லை.

அதில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம்.

இதனால் சம்பந்தப்பட்ட டோல் சாவடியில் கடுமையாக வாகன் நெரிசல் ஏற்பட்டது.

வாகங்கள் நீண்ட தூரத்திற்கு நின்றன. இதனால் பல வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனினும், இன்று காலை 7.30 மணியளவில் போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset