நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கடைகளில் விலைப் பட்டியல் வைக்காத 75 குற்றங்கள் கண்டறியப்பட்டன

கோலாலம்பூர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கடைகளில் விலைப் பட்டியல் வைக்காத 75 குற்றங்கள் கண்டறியப்பட்டன.

இது கிட்டத்தட்ட 8,609 ரிங்கிட் அபராத தொகையை உள்ளடக்கியது என்று உள்துறை, வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் கூறினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23 முதல் 27 வரை நாடு முழுவதும் உள்ள சில்லறை, மொத்த விற்பனை வளாகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கிட்டத்தட்ட 2,748 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அமலாக்கத்தின் போது அமைச்சகம் எந்த புகாரையும் பெறவில்லை.

அதே வேளையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்வது தொடர்பான வழக்குகள் எதுவும் இல்லை.

ஆனால் பொருட்களின் விலைப்பட்டியல் வைக்கப்படாதது தொடர்பில் 75 குற்றங்கள் கண்டறியப்பட்டது.

சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset