நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவுக்கான கடிதத்தின் நகல் என்னிடம் உள்ளது: டத்தோ முஹம்மது நிசார்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவுக்கான கடிதத்தின் நகல் என்னிடம் உள்ளது. நஜிப்பின் மூத்த மகன் டத்தோ முஹம்மது நிசார் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.

எனது தந்தை டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்க மாட்சிமை தங்கிய மாமன்னர் பிறப்பித்ததாகக் கூறப்படும் உத்தரவு  உண்மையில் உள்ளது.

அந்த உத்தரவு கடிதத்தின் நகலையும் நான் வைத்திருக்கிறேன்.

கூடுதல் உத்தரவு விசித்திரக் கதை அல்லது முட்டாள்தனம் அல்ல.

மாமன்னரின் உத்தரவைப் பற்றி பொய் சொன்னால் பெரிய தாக்கங்கள் இருக்கும் என்பதை நான் அறிவேன்.

கடந்த ஜனவரி 29ஆம் தேதி மன்னிப்பு வாரியக் கூட்டத்திற்குப் பிறகு அந்த நேரத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னராக இருந்த அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன்னால் சட்டத்துறை தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

நஜிப்பிற்கு குறைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு கூடுதலாக வீட்டுக்காவலுக்கு தகுதியானவர் என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சட்டத்துறை தலைவருக்கு இந்த கடிதம் அனுப்பியதை தற்போதைய பகாங் சுல்தான் உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் தான் இந்த விவகாரத்தில் நான் துணிச்சலாக போராடி வருகிறேன்.

உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset