நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு: அரசு கிளினிக்குகளில் காத்திருப்பு நேரம் 30 நிமிடத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவு உதவியோடு மேற்கொள்ளப்பட்ட சேவைகளால் அரசு கிளினிக்குகளில் நோயாளிகளின் காத்திப்பு நேரம் 30 நிமிடத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ ஜுலிகிப்லி அஹமத் தெரிவித்தார். 

சுகாதார  அமைச்சகம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இலக்கவியல் மாற்றங்களைச் செயல்படுத்தி வருவதே இந்த அடைவுநிலைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றத்தின் கீழ் மின்மருத்துவ பதிவுகள் (Electronic Medical Record - EMR) அமைப்பின் முதல் கட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டன.

இதன் கீழ் 50 லட்சம் மருந்து வழங்கல் பதிவுகள், 2 கோடி தடுப்பூசி பதிவுகள் மற்றும் 10 லட்சம் பல் சிகிச்சை பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

MySejahtera தேசிய சுகாதார இலக்கவியல் தளமாகவும் விரிவடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் முக்கிய சுகாதார பிரச்சனைகளை தீர்க்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் திட்டத்தில்  சுகாதார அமைச்சும் கூகுளும் இப்போது திட்டமிட்ட ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Precision Public Health Asia 2025 மாநாட்டைத் துவக்கி வைத்தப் பின் சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset