நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் கடுமையான எல்லை கண்காணிப்பு நடவடிக்கை: RM 171.6 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்

கோத்தா பாரு 
கடந்த ஆண்டு டிசம்பரில் எல்லை கடக்க தடை விதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, கிளந்தான் காவல் துறை  மலேசிய ரிங்கிட் 171.6 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நடந்த சோதனைகள் மூலம் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் (RM37.2 மில்லியன்) பறிமுதல் செய்யப்பட்ட அளவுடன் ஒப்பிடும்போது, 78 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது என கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மொஹ்த் யூசோஃப் மமாத் தெரிவித்தார்.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை (KDNKA) தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் இதற்கு மமுதன்மை காரணமாக் அமைந்தன. குறிப்பாக, எல்லை பாதுகாப்பை அதிகரித்தல், கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவையே நடவடிக்கைகளின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.

"எல்லைத் தடையை அமல்படுத்தியதிலிருந்து, செயல்பாடுகள் மிகச் சிறப்பாக துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாநில அளவிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்திறன் குறிக்கோள்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன,"
என்று  போலீஸ் தலைமையகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அதோடு இந்த வெற்றிக்கு பின் புலத்தில் இருந்த முக்கிய காரணமாக, திட்டமிட்ட செயற்குழு, போலீசாரின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவற்றை டத்தோ மொஹ்த்  குறிப்பிட்டார். மேலும், மத்திய மற்றும் மாநில அமலாக்க முகவர்களிடையே உள்ள ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset