நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி: புஷ்பா 2 படக்குழுவினர் அறிவிப்பு 

ஹைதரபாத்: 

புஷ்பா 2 படத்தைப் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகைப் பெரிதும் பாதித்தது 

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு புஷ்பா 2 படக்குழுவினர் 2 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்கினர். 

சிறுவன் ஸ்ரீதேஜுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கடந்த 13ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருடன் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் ஶ்ரீதேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் புஷ்பா 2 படக்குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset