நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ராவணனாக நடிக்க கன்னட நடிகர் யாஷ்ஷுக்கு ரூ.200 கோடி சம்பளம்

மும்பை: 

‘கே.ஜி.எஃப்’ படங்​களின் மூலம் இந்தியா முழு​வதும் பிரபல​மானவர், கன்னட நடிகர் யாஷ். இவர் கீது மோகன்​தாஸ் இயக்​கும் ‘தி டாக்​ஸிக்’ படத்​தில் இப்போது நடித்து வருகிறார். இதில் நயன்​தாரா, ஹுமா குரேஷி உட்பட பலர் நடிக்​கின்​றனர்.

இதையடுத்து நிதேஷ் திவாரி இயக்​கும் ‘ராமாயணம்’ படத்​தில் ராவணனாக நடித்து வருகிறார், யாஷ். இதில் ரன்பீர் கபூர் ராமராக​வும் சாய் பல்லவி சீதை​யாக​வும் நடிக்​கின்​றனர். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்​கின்​றனர். இரண்டு பாகங்​களாக இந்தப் படம் தயாராகிறது.

இதை, நமித் மல்ஹோத்​ரா​வின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறு​வனம், நடிகர் யாஷின் மான்ஸ்​டர்​மைண்ட் கிரியேஷன்​ஸுடன் இணைந்து தயாரிக்​கிறது.

இந்தப் படத்​தில் நடிகர் யாஷின் சம்பளம், படத்​தின் விநியோக பங்குடன் சேர்த்து ரூ.200 கோடி என்று செய்திகள் வெளி​யாகி​யுள்ளன. இது உண்மை என்​றால் இந்​திய சினி​மா​வில் வில்​லனாக நடிக்க அதிக சம்​பளம் வாங்கிய நடிகர் என்ற பெரு​மையை ​யாஷ் பெறு​வார் என்​கிறார்​கள்.

இந்தியா​வில் ஷாருக்​கான் தவிர, அல்லு அர்​ஜுன், ரஜினி​காந்த், விஜய் ஆகியோர் ஒரு படத்​துக்​கு ரூ.200 கோடிக்​கு மேல்​ ஊ​தியம்​ வாங்குவதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம்: தி ஹிண்டு 

தொடர்புடைய செய்திகள்

+ - reset