நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி 69 படத்தின் முதல் பார்வை ஜனவரி 1ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் முடிவு 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தின் முதல் பார்வையான FIRST LOOK POSTER எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது 

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன் ஆகியோர் தளபதி 69 படத்தில் நடித்து வருகின்றனர். 

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

அரசியல் கதைக்களமாக கொண்டு இந்த படம் அமையும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வை ஆங்கில புத்தாண்டு அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

ஆனால், இது தொடர்பான அப்டேட் எதுவும் இதுவரை வரவில்லை. தளபதி 69 படத்தை KVN PRODUCTIONS தயாரிக்கின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset