நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இந்திய பூப்பந்தாட்ட வீராங்கனை பி.வி.சிந்து திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி: குடும்பத்துடன் வாழ்த்திய நடிகர் அஜித் குமார் 

ஹைதரபாத்: 

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவருக்கும் தெலுங்கானாவின் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில் இரு குடும்பத்தினரும் சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு டிசம்பர் 24-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சமீபத்தில் தெரிவித்தனர்.

அதன்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று புதுமண ஜோடியை வாழ்த்தினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset