நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசிய இந்திய இசைக்கலைஞர்களுக்கு ம.இ.கா என்றும் அரணாக விளங்கும்: டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அறிவிப்பு 

ஷா ஆலாம்: 

நாட்டிலுள்ள இந்திய இசைக்கலைஞர்களுக்கு என்று தனி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அவர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என்று நல்ல நோக்கத்தில் மலேசிய தமிழ் கலைஞர்கள் குரல் இயக்கத்தின் ஏற்பாட்டில் மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா சிறப்பாக நடத்தப்பட்டது என்று ம.இகா தேசிய தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார் 

எல்லா பாடலுக்கும் இசைக்கலைஞர்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்குகின்றனர். PRO VENUS நிறுவனத்திற்கு MIED மூலமாக 1 லட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என்று டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவிப்பு செய்தார். 

இசை கலைஞர்களுக்கான பயிற்சி திட்டம் மற்றும் வகுப்புகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் கருத்துரைத்தார். 

மேலும், இந்த விருது விழாவுக்கு என்று தாம் தனிப்பட்ட முறையில் 20 ஆயிரம் ரிங்கிட்டும் ம.இ.கா சார்பாக 30 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார். 

இந்த நிகழ்வு ஒரு சரித்திரப்பூர்வமாக நிகழ்வாகும்.  இசைத்துறையில் மாணவர்களை அடுத்த கலைஞர்களாக உருவாக்கும் நல்ல நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset