நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கால்வாயில் மூழ்கி காவல்துறை அதிகாரி மரணம் : பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் தகவல் 

ஈப்போ : 

கம்போங்  காஜா அருகே உள்ள ஜாலான் ஊத்தாமா சங்காட் லாடா என்ற இடத்தில் உள்ள பாசனக் கால்வாயில் நேற்று  காவல்துறை அதிகாரி  ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். 

நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த  அவர்,  நீரோட்டத்தில் அடித்துச்  செல்லப்பட்டு   நீரில் மூழ்கி , மாண்ட நிலையில்  கண்டெடுக்கப்பட்டார்.   

தொடர்ந்து,  முஹம்மது தௌஃபிக் சயுதி எனும் இவரது  உடல் அதிகாலை 4.55 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று  பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர்  சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.  

 39 வயதான முஹம்மது தௌஃபிக் சயுதி என்பவர் மலாக்கா தெங்கா மாவட்டத் தலைமையகத்தில் பணிபுரியும் காவல் துறை அதிகாரி ஆவார் . 

அன்றைய தினம், தனக்கு விடுமுறை என்பதால் லாடா  இடைநிலைப்பள்ளியின்  முன்னாள் மாணவர்களைச் சந்திப்பதற்காக  வீடு திரும்பினார் என்பது குறிப்பிடப்படுகிறது. 

-சாமூன்டீஸ்வரி & மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset