நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயா பல்கலைக்கழகம் வெற்றிகரமாக நடத்திய PANI UM விளையாட்டுப் போட்டி 2024

கோலாலம்பூர்: 

மலாயா பல்கலைக்கழகம் (UM) பெருமையுடன் PANI UM விளையாட்டுப் போட்டி 2024-ஐ நடத்தியது. மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய மாணவர்கள் சங்கத்தின் (PANI UM) ஏற்பாட்டில் நடந்த இந்த போட்டியில், 500-க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் உட்பட அவர்களின் குடும்பங்களும் இணைத்து, விளையாட்டுப் போட்டிகள், ஒற்றுமை கலாச்சார நாளாக மாறியது.

இந்த நிகழ்வில் வாலிபால், டார்ட்ஸ், கரோம், பேட்மிண்டன், எழுவர் கால்பந்து போட்டி, உட்பட பல போட்டிகள் நடந்தன. மலாயா பல்கலைக்கழக அரீனா சுகான் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் குழந்தைகளுக்கான பிரிவுகளும் இருந்தன.

சிங்கப்பூர், இந்தியா உட்பட பிற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த் அபோட்டியில் கலந்து கொண்டு கூடுதல் சிறப்பாக அமைந்தது. அதோடு இந்நடவடிக்கை மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் இந்திய மாணவர் சமூகத்தின் உறுதியான ஒற்றுமையையும் பல்கலைக்கழகத் திட்டங்களை ஆதரிக்கும் அவர்களின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்தியது.

இந்த விளையாட்டுப் போட்டியில் புஷ்பிதா அணி வெற்றி பெற்றது. மேலும் 5th கல்லூரி இரண்டாவது இடத்தைப் பெற்றது. 

PANI UM விளையாட்டுப் பண்டிகை இயக்குநர் எஸ். பிரசாத், நிகழ்ச்சியின் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்:

இந்த அளவிலான நிகழ்வை நடத்துவது எளிதானது அல்ல. ஆனால் பலரின் முழுமையான ஆதரவின்றி இது சாத்தியமாக முடியாது. குறிப்பாக சிங்கப்பூர், இந்தியா மற்றும் மலேசியாவின் பிற பகுதிகளில் பணியாற்றும் UM பழைய மாணவர்களுக்கு, அவர்கள் இதற்கு நேரம் ஒதுக்கி நிகழ்வில் பங்கேற்றதற்கும் மேலும் இதனை சிறப்பாக்கியதற்கும் நன்றி என கூறினார்.

-தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset