நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய அதிபரின் உடல்நிலை காரணமாக பிரதமருடனான இன்றைய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர்:

இந்தோனேசிய அதிபரின் உடல்நிலை காரணமாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடனான இன்றைய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தோனேசியாவின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரின் சந்திப்பு இன்று லங்காவியில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தோனேசிய அதிபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இரு தலைவர்களுடனான இன்றைய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்தோனேசிய அதிபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

இதனால் இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பை மீண்டும் தொடங்க முடியும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset