நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்காளதேசத்தில் சிறுபான்மையருக்கு எதிரான கொடூரம் கண்டிக்கத்தக்கது: சரஸ்வதி

கோலாலம்பூர்:

வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை தெரிவித்தார்.

எந்தவொரு உயிரை கொல்வதும், கொடுமைப்படுத்துவதும் பாவமான, காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

ஜாலான் பங்சார் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வங்காளதேச இந்துக்களுக்காக மலேசிய இந்து சங்கம் நடத்திய சிறப்பு பூஜை கலந்து கொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார்.

வங்காள தேசத்தில் வசிக்கும் இந்துக்கள் அந்நாட்டில் பூர்வீக குடிமக்களாவர். அந்நாட்டில் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

அவர்களின் மத நம்பிக்கையின் காரணமாக அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார். கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுகிறது என செய்திகள்  வந்து கொண்டிருக்கிறது.

இந்த கொடூர செயல் வேதனை நமக்கு வேதனையை தருவதோடு, இந்த செயல் கண்டிக்கத்தக்க ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset