நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொஸ்மா வழக்கில் பசிபிக் சிவா கும்பலைச் சேர்ந்த  16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

பட்டர்வொர்த்:

சொஸ்மா வழக்கில் பசிபிக் சிவா கும்பலைச் சேர்ந்த 16 பேர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த எட்டு ஆண்டுகளாக இக் கும்பல் ஒழுங்கமைக்கப்பட்ட பல குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

சுப்பிரமணியம்,  திலகராஜன், கேசவன், ஷர்வின், லிகன்குமார், தினேஸ்வரன், கிருபாகரன், மகேஷ்குமரா, ஜனகேஷ், லோகேஸ்வரராஜ், ஹென்ரி, சிவசங்கரன், பார்த்திபன், அருணன், டெனேஸ்வரன், அலகேஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி நார் ஆசா கஸ்ரான் முன்னிலையில் தமிழில் குற்றச்சாட்டுகள் ஒன்றாக வாசிக்கப்பட்டபோது, ​​அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டு தலையசைத்தார்கள். ஆனால் அவர்கள் குற்றச்சாட்டுகளை ஒப்புகொள்ளவில்லை.

சொஸ்மா சட்டம் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தொடரும்.

அதவேளையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset