நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல சாவா ஶ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தின் திருவிழா: ஜனவரி 1ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்

ரந்தாவ்:

கோல சாவா ஶ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தின் திருவிழா வரும் ஜனவரி 1ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெறும்.

ஆலயத்தின் ஸ்தாபகர் அப்பா முருகவேல் இதனை கூறினார்.

பேபி சிவன் ஆலயம் என்றழைக்கப்படும் ஶ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயம் மலேசிய மக்களிடையே மிகவும் பிரபலமான ஆலயமாக விளங்குகிறது.

இவ்வாலயத்தின் 36ஆவது ஆண்டுத் திருவிழா வரும் ஜனவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற கொடியேற்ற விழாவுடன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

வரும் டிசம்பர் 31ஆம் தேதி 5ஆவது  மைல் முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஶ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தை வந்தடைவார்.

ஜனவரி 1ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆலய பூஜை, யாக பூஜை, வால்முனி அப்பாவுக்கு காப்பு கட்டுதல் நிகழ்வுகள் நடைபெறும்.

மதியகம் 1 மணிக்கு பால்குடம், காவடி எடுப்பவர்கள் அப்பாவுடன் இணைந்து ஆலயம் வந்து காணிக்கை செலுத்துவார்கள்.

அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும்.

ஆகவே சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக வந்து இந்த ஆலய விழாவில் கலந்து கொள்ளுமாறு  ஶ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தின் சார்பில் தாம் கேட்டுக் கொள்வதாக ஸ்தாபகர் அப்பா முருகவேல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset