நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவுகளில் மாத்திரைகளா?; இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிரான அவதூறுகளை நிறுத்துங்கள்; சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்: பிரெஸ்மா

கோலாலம்பூர்:

உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகிறது என இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிரான அவதூறுகளை  பரப்பிவரும் அனைவரும் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகிறது என்ற வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக நமது மக்கள் அதனை சமூக ஊடகங்களின் பகிரிட்டு வருகின்றனர்.

உண்மையில் இந்த சம்பவம் மலேசியாவில் நடக்கவில்லை. அதுவும் இதுவொரு பழைய வீடியோவாகும்.

ஆனால் இந்த வீடியோவை பகிர்ந்து ஒரு சில பொறுப்பற்ற நபர்கள் இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக அவதூறுகளை ஏற்படுத்துகின்றனர்.

மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களும் சுகாதாரத் துறை, ஊராட்சி மன்றங்களின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகின்றன.

அதனால் அவ்வளவு எளிதாக உணவுகளில் எதையாவது கலந்து விற்பனை செய்ய முடியாது.

ஆகவே இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டும்.

அவதூறு பரப்பும் நபர்களின் கைப்பேசி எண் அடையாளம் காணப்பட்டுள்ளது. புலனக் குழுக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதைப் பரப்புவதை தடுக்காமல் போனால் அட்மின் மீதும் புகார் அளிக்க திட்டமிட்டு வருகிறோம்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பிரெஸ்மா தனது வழக்கறிஞர்களுடம் விவாதித்து வருவதாக டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset