நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆராவ் அரண்மனை பூ ஜாடிகளைச் சேதப்படுத்திய மனநிலை சரியில்லாத நபர் கைது

ஆராவ்:

ஆராவ் அரண்மனை நடைபாதையில் உள்ள பூ ஜாடியை உடைத்ததாக சந்தேகத்தின் பேரில் மனநிலை சரியில்லாத நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

42 வயதான சந்தேகத்திற்குரிய நபர் அராவில் உள்ள பழைய மசூதி இஸ்லாமிய கல்லறைக்கும் அராவ் அரண்மனைக்கும் இடையிலான நடைபாதையில் ஐந்துக்கும் மேற்பட்ட அலங்கார பூ ஜாடிகளை வேண்டுமென்றே தள்ளியது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் 12 மணியளவில் நடந்தேறியது. 

சந்தேக நபரைக் கைது செய்வதற்கு முன்பு அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர்  நடவடிக்கை எடுத்தாக 
 அராவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மத் மொஹ்சின் முஹம்மத்  ரோடி கூறினார். 

அந்தச் சந்தேகத்திற்குரிய நபர் காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்ட பின்னர் , தான்  பூ ஜாடியை  உடைத்ததை ஒப்புக்கொண்டார்; பிறகு கைதும் செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட அந்தச் சந்தேகத்திற்குரிய நபரின் மேல் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறுநீர் பரிசோதனையில் அந்தச் சந்தேகத்திற்குரிய நபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றும் நிரூபணம் ஆனது. இருப்பினும். இந்த நபருக்கு முந்தைய இரண்டு குற்றவியல் பதிவுகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

இச்சந்தேகத்திற்குரிய நபர் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்காக கங்கார் துவாங்கு ஃபவுசியா மருத்துவமனையின் மனநலத் துறைக்கு அனுப்பப்படுவார் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

-நந்தினி ரவி& மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset