நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத சிம் கார்டு விற்பனை; மலேசியாவைச் சேர்ந்தவரை திருச்சியில் மடக்கியது போலிஸ்

குருகிராம்: 

வெளிநாட்டில் சட்டவிரோதமாக சிம் கார்டு விற்பனை செய்து வந்த நபரை திருச்சியில் வைத்து ஹரியானா சைபர் கிரைம் போலிசார் கைது செய்தனர்.

மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஜமில் பின் முஹம்மது இக்பால். 

இந்தியாவில் இருந்து சிம்கார்டுகளை வாங்கி, மலேசியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார். 

வெளிநாட்டில் இருந்தபடி, இங்குள்ள மக்களிடம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில், திருச்சியில் இருந்த போது இக்பாலை ஹரியானா சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 

அவரிடம் இருந்து சர்வதேச டிரைவிங் ஓட்டுநர், கிரெடிட், டெபிட் கார்டுகள், இந்திய, வெளிநாட்டு கரென்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset