நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்கள் ஒவ்வொரு பெருநாளையும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டும்: ஏசிபி அன்பழகன்

பூச்சோங்:

மலேசியர்கள் ஒவ்வொரு பெருநாளையும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டும். செர்டாங் மாவட்ட போலிஸ்படைத் தலைவர் ஏசிபி அன்பழகன் இதனை கூறினார்.

நம் நாட்டில் 4 பண்டிகைகள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கிறிஸ்துமஸ் விழா நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இதனை அடிப்படை செர்டாங் மாவட்ட போலிஸ்படையின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பூச்சோங் கின்றாரா விக்டோரியா ஆதரவற்ற இல்லத்தில் நடைபெற்றது.

இந்த இல்லத்தில் 70 வயதானவர்களும், 14 பிள்ளைகளும் உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உதவி பொருட்கள் வழங்கப்பட்டதுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தக்சின் லயிவ் கிளப்பிற்கு எனது நன்றிகள்.

மலேசியர்கள் அனைத்து பெருநாளையும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

வரும் காலங்களிலும் இது தொடரும் என்று அன்பழகன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset