நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது

கோலாலம்பூர்:

பண்டார் துன் ரசாக் செராஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

சத்து கேமா சமூக  இயக்கத்தின் தலைவர் ஜோனதன் வேலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் 60 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் கூட்டரசு மேம்பாட்டு தொழில் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மூலமாக 100 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் ஆதரவோடு இந்த நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றதாக ஜோனதன் வேலா தெரிவித்தார்.

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழும் மக்களுக்கு அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் ஜோனதன் வேலா தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset