நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவர்கள் ராஜினாமா விவகாரத்தில் சுகாதார அமைச்சு கண்ணை மூடிக் கொண்டிருக்கவில்லை: ஜூல்கிப்ளி

புத்ராஜெயா:

மருத்துவர்கள் ராஜினாமா விவகாரத்தில் சுகாதார அமைச்சு கண்ணை மூடிக் கொண்டிருக்கவில்லை.

சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ ஜூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில் 6,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்கள் பதிவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

குத்தகையில் இருந்து மனிதவள அமைச்சின் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்படும் நிலையில் இந்த ராஜினாமா சம்பவங்கள் நடக்கிறது.

மேலும் சில மருத்துவர்கள் மீண்டும் கல்வித் துறைக்கு மாறியுள்ளனர்.

இதனால் பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதில்  அவர்கள் இன்னும் பங்களித்து வருகின்றனர் என்றே கூறலாம்.

சிறுநீரக மருத்துவர் டாக்டர் ரஃபிதா அப்துல்லா எழுப்பிய கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இந்த அறிக்கையை  வெளியிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset