நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயா பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்: ஸம்ரி உத்தரவு

கோலாலம்பூர்:

மலாயா பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்.

உயர்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதிர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இரண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளது.

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக மலாயாவிற்கு  தாம் உத்தரவிட்டுள்ளேன்.

மலாயா பல்கலைகழகம் வழக்கை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல், இந்த வழக்கிற்கு உண்மையிலேயே நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் சட்டத்திற்கு எதிரான தவறுகளை அமைச்சு பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset