நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

 ‘முஃபாசா’ இந்தியாவில் முதல் நாளில் ரூ.12 கோடி வசூலித்துள்ளது

மும்பை:


குழந்தைகளுக்கான படமான ‘முஃபாசா’ இந்தியாவில் முதல் நாளில் ரூ.12 கோடி வசூலித்துள்ளது. 

இந்த வசூல் தொகை நேற்று முன்தினம் இந்தியாவில் வெளியான பிற படங்களின் வசூலுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். ‘தி லயன் கிங்’ படத்தின் இரண்டாவது பாகம்தான் ‘முஃபாசா’ படம். சிங்கங்களின் கதையாக உருவாகியுள்ள இந்த அனிமேஷன் படத்துக்கு ஷாருக்கான், மகேஷ்பாபு, அசோக் செல்வன் உள்ளிட்ட நடிகர்கள் அந்தந்த மொழிகளில் டப்பிங் பேசியுள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் இந்தியில் மட்டும் ரூ.7 கோடி வசூலித்துள்ளது. 

இதன் ஆங்கில பதிப்பு ரூ.3 கோடியும் தென்னிந்தியாவில் ரூ.2 கோடியும் ‘முஃபாசா’ படம் வசூலை குவித்துள்ளது. 

அதே சமயம் வெளிநாடுகளில் இப்படம் ‘தி லயன் கிங்’ அளவுக்கு வசூலை ஈட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உலக அளவில் இப் படத்தின் வசூல் குறைந்துள்ளது. அதே சமயம், இப்போது கிறிஸ்துமஸ் விடுமுறை வருவதால் படம் வேகமெடுக்கும் என ஹாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset