நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியத் தமிழ் கலைஞர்கள் குரல் இயக்கத்தின் ஏற்பாட்டில் மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா 2024 சிறப்பாக நடைபெற்றது 

ஷா ஆலாம்: 

மலேசியத் தமிழ் கலைஞர்கள் குரல் இயக்கத்தின் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா 2024 நேற்றிரவு TSR மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது 

 ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இசைத்துறையில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை நன்கு அனுபவம் வாய்ந்த சுமார் 52 இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

FLUTIST, TABLIST, TRUMPETER, SAXOPHONIST,  EMCEE, BONGO PLAYERS, DRUMMER ஆகிய பிரிவுகளில் இசைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 

மேலும், மறைந்த கலைஞர் கலைத்தென்றல் பி.பாலசந்தர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் இந்த விருதை அவரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, மலேசியத் தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தின் தேசியப் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. இந்த பாடலை அமரர் ரமேஷ், மூர்த்தி, ஜீவா, கலைவாணி, அன்னப்பூரனி ஆகியோர் பாடிய வேளையில் கவிநாயகன் யுவாஜி பாடலாசிரியராக பணியாற்றினார். 

கலைத்தென்றல் பி.பாலசந்தர்@ அப்பு  அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த விருது விழாவினை இன்று அவரது மகன்கள் மிக சிறப்பாக முன்னெடுத்து நடத்தி காட்டியுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset