நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மாரில் அமைதியை மீட்டெடுக்க மலேசியா துணை நிற்கும்: முஹம்மத் ஹசன்

சிரம்பான்: 

மலேசியா அடுத்த ஆண்டு ஆசியான் அமைப்பிற்கு தலைமை தாங்கும் நிலையில், மியான்மாரில் நடக்கும் வன்முறையைக் குறைக்கும் முயற்சிகளில் முனைப்புடன் செயல்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன் உறுதியளித்தார். 

மியான்மரில் தற்போது நிலைமை மிகவும் நெருக்கடியாக உள்ளது. 

இதனைக் கையாள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலுடன் ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமித்துள்ளதாகவும் ஹசன் கூறினார். 

வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ ஓத்மான் ஹாஷிம், பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் அனுபவம் வாய்ந்தவர். 

மியான்மரில் உள்ள எதிரெதிர் பிரிவுகள் மக்களுக்கு எதிரான வன்முறையை எப்படி எளிதாக்க முயல்கின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மியான்மரில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை மற்றும் அந்நாட்டில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க மலேசியாவின் முயற்சிகள் குறித்து முஹம்மத் ஹசன் கருத்து தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset