நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சென்னை- பினாங்கு இடையிலான இண்டிகோ நிறுவனத்தின் தினசரி நேரடி விமான சேவை இன்று தொடங்கியது

ஜார்ஜ் டவுன்:

சென்னை- பினாங்கு இடையிலான இண்டிகோ நிறுவனத்தின் தினசரி நேரடி விமான சேவை இன்று தொடங்கியது

சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2.15 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலையில் பினாங்கிற்கு சென்றது.

பின்னர், பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை வந்தடைந்தது. 

இந்த விமானம், 186 பேர் பயணிக்க கூடிய ஏர் பஸ் 320 ரகத்தைச் சேர்ந்தது. 

சென்னை - பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். 

சென்னையில் இருந்து பினாங்குக்கும், பினாங்கில் இருந்து சென்னைக்கும் தலா 530 ரிங்கிட்  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset