நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அழகு ராணி போட்டிகளில் நடக்கும் மோசடித்தனங்கள்: அம்பலப்படுத்தினார் நந்தினி

கோலாலம்பூர்:

இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களால் நடத்தப்படும் அழகு ராணி போட்டியில் மோசடிகள் நடந்து வருவதாக பாதிக்கப்பட்ட  நந்தினி உத்தமபுத்திரன் கூறினார்.

அழகு ராணி போட்டியில் குமாரி பிரிவில் திருமதியை இணைந்து கொண்டு அவரை வெற்றியாளராக தேர்வு செய்தனர்.

மேலும் அதிகம் டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர் முதல் மூன்று இடங்களில் அழகு ராணியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

அழகு ராணி போட்டிக்குரிய விதிமுறைகளை மீறி அழகு ராணி போட்டி நடத்தப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினர்.

அழகு ராணி ஏற்பாட்டாளர் வீடியோ காணொலி மூலம் பேசும் காட்சிகளையும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போட்டு காண்பிக்கப்பட்டது.

அழகு ராணி போட்டியில் நடக்கும் மோசடிகள், அதிக டிக்கெட் விற்பனை செய்பவர் மட்டுமே அழகு ராணியாக தேர்வு செய்யப்படுவது தொடர்பில் தாம் போலிசில் புகார் செய்தேன்.

இன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நந்தினி இதனை தெரிவித்தார்.

பகாங் மாநில சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் உரிமை கட்சியின் உதவித் தலைவர் காமாட்சி, சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அழகு ராணி போட்டிக்கு என்று ஒரு தனி மகத்துவம் உள்ளது.

ஆனால் இன்று யார் அதிக டிக்கெட் விற்று தருகிறார்களோ அவர்களை அழகு ராணியாக தேர்வு செய்யப்படுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.

மேலும் இது தொடர்பில் புக்கிட் அமானில் மகஜர் வழங்கப்படும் என்று குணசேகரன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வழக்கறிஞர்  சேத்னா பிரிமோகன் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்படும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset