
செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்: குணராஜ்
புத்ராஜெயா:
கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.
சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை அண்மையில் சரிந்து விழுந்தது.
இப்பள்ளி தொடர்பான சர்ச்சைகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று கல்வியமைச்சரின் சிறப்பு அதிகாரியை இன்று சந்தித்தோம்.
பள்ளி தொடர்பில் பல விவகாரங்கள் அவரிடம் பேசப்பட்டது. குறிப்பாக புதிய பள்ளி கட்டுவதற்கான முயற்சிகள் விவாதிக்கப்பட்டது.
புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு கிட்டத்தட்ட 24 மில்லியன் ரிங்கிட் செலவாகிறது.
குறிப்பாக பள்ளியை சொந்தமாக கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் அது தொடர்பில் கல்வியமைச்சுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது தொடர்பில் கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளது.
ஆகவே இத் தமிழ்ப்பள்ளி பிரச்சினையை சர்ச்சையாக்காமல் புரிய பள்ளியை கட்டுவதற்கான முயற்சியில் ஒன்றிணைவோம் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2025, 6:41 pm
நெகிழியிலிருந்து விடுபடுவோம்: அழைப்பு விடுக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
September 11, 2025, 6:29 pm
இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது: துன் மகாதீர்
September 11, 2025, 6:04 pm
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கம்போங் சுங்கை பாருவில் 37 வீடுகள் காலி செய்யப்பட்டன: போலிஸ்
September 11, 2025, 5:27 pm
மலேசியாவில் மின்-சிகரெட் கட்டங்கட்டமாகத் தடை செய்யப்படும்: சுகாதார அமைச்சர் ஸுல் கிஃப்லி
September 11, 2025, 4:19 pm
ஜொகூரில் மின்-சிகரெட்டு வாங்குவோரில் சிங்கப்பூரர்களே அதிகம்
September 11, 2025, 4:06 pm
நீதிபதி பதவி விலகக் கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
September 11, 2025, 3:51 pm
டாங் வாங்கி போலிஸ் தலைவரை காயப்படுத்தியது ஒரு இழிவான, கண்டிக்கத்தக்க செயலாகும்: அன்வார்
September 11, 2025, 2:02 pm