நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

பன்றிப் பண்ணை விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

கோலா லங்காட்டில் உள்ள பன்றி வளர்ப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவை இந்த திங்கட்கிழமை சந்திக்க சிலாங்கூர் உள்கட்டமைப்பு, விவசாய ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் அனுமதி பெற்றார்.

இஷாம் மாநில நிர்வாகக் குழுவின்  முடிவின் விவரங்களை சுல்தானுக்கு விளக்கி வழங்குவார் என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையை எந்த சமரசமும் இல்லாமல் வலுப்படுத்த அமலாக்க நிறுவனங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் நேற்று தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset