நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவுப் பேருந்து, லோரி உட்படுத்திய விபத்தில் 4 பயணிகள், லோரி ஓட்டுநர் சிக்கிக் கொண்டனர்

ரவாங்:

விரைவுப் பேருந்து, லோரி உட்படுத்திய விபத்தில் 4  பயணிகள், லோரி ஓட்டுநர் சிக்கிக் கொண்டனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.

ஈப்போவிலிருந்து ரவாங் செல்லும் வடக்கு - தெற்கு விரைவுச் சாலையின் கிலோ மீட்டர் 1.0 இல் இன்று அதிகாலை ஒரு விரைவுப் பேருந்தும் மூன்று டன் லோரியும் மோதி  விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில்  நான்கு பேருந்து பயணிகளும் ஒரு லோரி ஓட்டுநரும் சிக்கிக் கொண்டனர்.

அதிகாலை 5.24 மணிக்கு தனது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

உடனே ரவாங் தீயணைப்பு,  மீட்பு நிலையத்தின் பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தீயணைப்பு இயந்திரங்கள் காலை 5.51 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு பேருந்தும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட விபத்தை கண்டறிந்தன.

நான்கு பேருந்து பயணிகள், ஒரு லோரி ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சிக்கிக் கொண்டனர்.

பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 42 பயணிகள் இருந்தனர், 38 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது.

பஸ் பயணிகள் நான்கு பேர் சிக்கிக் கொண்டனர்.

ஆனால் அவர்களில் மூன்று பேர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர், 

மற்றொருவர் இன்னும் சிக்கிக்
கொண்டுள்ளார். மீட்புக் குழுவினரால் லோரி ஓட்டுநரும் மீட்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset