நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

பள்ளிவாசல் கட்டுவதற்காக சிலர் நன்கொடைகள் சேகரித்து அப்பணத்தை மனைவிக்கு கொடுத்துள்ளனர்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

சிலர் பள்ளிவாசல் கட்ட நன்கொடைகள் அல்லது பொது நிதியை சேகரிப்பதாகக் கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள் சேகரிக்கும் பணம் அவர்களின் மனைவிகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இது மிகவும் வருத்தமளிக்கும் விவகாரமாகும்.

தொண்டு பங்களிப்புகள் அல்லது நன்கொடைகள் என்ற பெயரில் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று.

மேலும் மில்லியன் கணக்கான ரிங்கிட் நிதி திரட்டலில் இருந்து சட்டவிரோத சொத்துக்களை சேகரித்தது கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில் குறைந்தது மூன்று பிரபலமான அரசு சாரா நிறுவனங்கள் எம்ஏசிசியின் கண்காணிப்பில் உள்ளன.

எம்ஏசிசி சம்பந்தப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உளவுத்துறை, தீவிரமாக விசாரணைகளை நடத்தியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset