நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1001 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்: டத்தோ அப்துல் மாலிக் வழங்கினார்

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாலிக் ஸ்ட்ரிம்ஸ் வாயிலாக  பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான பள்ளித்  தவணை நாளை தொடங்கவுள்ளது.

இந்நிலையில் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்தப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கிள்ளான் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 1001 மாணவர்களுக்கு இப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சுமார் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற்றனர்.

இதில் கிட்டத்தட்ட 90 சதவீத மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த உதவிகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இதே போன்று வரும் காலங்களில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் தனது சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளை தொடரும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset