நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகம்: சுரேன் கந்தா

கோலாலம்பூர்:

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் 11 மாநிலங்களில் உள்ள 528 தமிழ்ப்பள்ளி மாணவர்களைச் சென்றடையும்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை டான்ஸ்ரீ தம்பிராஜா உருவாக்கினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இன்று 44ஆண்டு நிறைவை அடைகிறது.

எங்களின் குரு டான்ஸ்ரீ தம்பிராஜா இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் இன்றும் நம்முடன் இங்கு தான் உள்ளார்.

டான்ஸ்ரீ தம்பிராஜாவின் ஆசீவாதத்துடன் 2026 ஸ்ரீ முருகன் கல்வி தவணை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஸ்கந்த வேள்வி என்ற தாரக மந்திரத்துடன் இவ்வாண்டின் கல்வி தவணை தொடங்கியுள்ளது.

கோவிட்-19 காலத்திற்கு முன்பே டான்ஸ்ரீ தம்பிராஜா பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளத்தை உருவாக்கினார்.

இந்த கல்வித் தளம் மாணவர்களுக்கு பெரும் பயனாக இருந்தது. 

குறிப்பாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு இத்தளம் முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.

இந்த பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தற்போது நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் சென்றடைய உள்ளது.

இதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையமும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றமும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம் நாட்டில் உள்ள 11 மாநிலங்களில் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இக்கல்வித் தளம் சென்று சேரும்.

இக்கல்வித் தளம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பெரும் கல்வி புரட்சியை ஏற்படுத்தும் என்று சுரேன் கந்தா நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset